Tuesday, December 27, 2011

பேராசிரியா்களான சந்திர சேகரன் / எம்.எஸ்.எம். அனஸ் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம்

பேராசிரியா்களான சந்திர சேகரன் ( கொழும்பு பல்கலைக்கழகம் ) எம்.எஸ்.எம். அனஸ் ( பேராதனைப் பல்கலைக்கழகம் ) ஆகியோர் 2012 ம் ஆண்டு 2ம் மாதம் 10 ம் திகதி கல்குடா முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். முஸ்லிம் பாடசாலைகளில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சொற்பொழிவாற்றவுள்ளனர். சனான் அஸ்மினுடைய அழைப்பின் பெயரிலேயே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஓர் வாழ்க்கைக் குறிப்பு













பெயர் - சோமசுந்தரம் சந்திரசேகரன்

பிறந்த இடமும் திகதியும் - பதுளைஇ 23.12.1944 
முகவரி - 83/3, 1/1, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6.
கல்வி - 1950 – 1960 : ஊவாக் கல்லூரி, பதுளை
1961 – 1962 : மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை
1963 – 1967 : பேராதனைப் பல்கலைக்கழகம் -B.Ed. (Hons)
1977 – 1978 : ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகம், ஜப்பான் (ஜப்பானிய மொழிஇ பண்பாட்டியல் சான்றிதழ்)
1978 – 1980 : ஹிரோசிமாப் பல்கலைக்கழகம், ஜப்பான் (M.Ed.)
எழுதிய புத்தகங்கள்
1.இலங்கை இந்தியர் வரலாறு.
2.கல்வியியல் கட்டுரைகள்.
3.இலங்கையின் கல்வி வளர்ச்சி.
4.கல்வியும் மனித மேம்பாடும்.
5.புதிய நூற்றாண்டுக்கான கல்வி.
6.இலங்கையில் கல்வி.
7.கல்விச் செயற்பாட்டில் புதிய செல் நெறிகள்.
8.உயர் கல்வியில் புதிய செல் நெறிகள்.
9.கல்விச் சிந்தனையில் புதிய செல் நெறிகள்.
10.இலங்கையில் தமிழர் கல்வி.
11.அபிவிருத்தியும் கல்வியும்.
12.கல்வியியல் சிந்தனைகள்.
13.மலையக கல்வி சில சிந்தனைகள்.
14.கல்வி ஒரு பன்முக நோக்கு.
15.NEW TRENED IN EDUCATION.
16.EDUCATION OF THE DISADVANTAGED COMMUNITIES.
17.கல்வித் திட்டமிடல்
18.கல்வியும் மனித வள விருத்தியும்.
19.புதிய கல்வித் தடங்கள்.
20.சமகாலகல்வி முறைகளின் பரிமாணங்கள்.
21.அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்.
22.முகாமைத்துவக் கொள்கைகள் ஓர் அறிமுகம்.
23.மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம் ஒரு விரி நிலை நோக்கு.
24.இலங்கையின் உயர் கல்வி பல்கலைக்கழக கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்.
25.கல்வியியலும் நிகழ் பதிவுகளும்.
26.சமகால கல்வி முறைகள் ஒரு விரி நிலை நோக்கு.

மொழி பெயர்ப்புப் பணி

1.இந்தியாவும் அதன் தென்னாசிய அயல் நடுகளும்.
2.சமுதாய வலுவூட்டல்
3.ஜனநாயகம் என்றால் என்ன?
4.அபிவிருத்தி மாதிரிகள்.
5.ஜனநாயக அரசாங்க மாதிரிகள்.
6.உழைப்பால் கல்வியில் உயர்வோர்.
7.மேலதிக மொழிகளை கற்பித்தல்.
8.பெற்றோரும் கல்வியும்.
9.தனிமுறைப் போதனை.
10.பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்.
11.பசுமை நூல் (மறைந்த லிபியா ஜனாதிபதி கடாபி எழுதியது.)

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஓர் அறிஞர், சிந்தனையாளர், கல்வியியலாளர், பல்கழைக்கழக பீடாதிபதி, எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், என இலங்கையில் மட்டுமன்றி தமிழ் பேசும் உலகில் நன்கு அறியப்பட்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரன் என்பதே எனது உறுதியான கருத்தாகும். இலங்கையில் தோன்றிய கல்வியியல் பேராசியர்களான எஸ். முத்துலிங்கம்,ப.சந்திர சேகரன், சபா ஜெயராசா, பாக்கீர் ஜௌபர் போன்றோர் மிக முக்கியமானவர்கள்.கல்வியியல் துறையில் இவர்களுடைய பணிகளும் பங்களிப்புகளும் மிக மிக கணிசமானவை என்பதே எனது மதிப்பீடாகும்.
பேராதனையில் கல்வியலோடு வரலாறு ,பொருளியல், தமிழ் போன்ற பாடங்களையும் கற்றதால் ஏராளமான தமிழ் பேராசிரியர்களிடம் கற்க முடிந்தது. பேராசியர்களான சு.வித்தியானந்தன், செல்வநாயகம், வேலுப்பிள்ளை, க.கணபதிப்பிள்ளை போன்றோர் தமிழ் கற்பித்தனர். அமீர் அலி, பால கிருஸணன், சின்னத்தம்பி போன்றோர் பொருளியல் கற்பித்தனர்.


இந்திர பாலா, பத்ம நாதன், போன்றோர் வரலாறு கற்பித்தனர். அப்போது கல்வித்துறை விரிவுரையாளர்களாக இருந்தோர் பேராசிரியர்கள் ப.சந்திர சேகரன், எஸ்.முத்துலிங்கம், கலாநிதி அகிலா நைல்ஸ் போன்றோர் இருந்தனர்.

கல்;வியியல் தொடர்பாக பிலிப்பைன்ஸ், ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, இந்தியா, லிபியா, ஜேர்மன் போன்ற நாடுகளில் நடைபெற்ற மகாநாடுகள், செயலமர்வுகள் என்பவற்றில் பங்கு கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வியியல் வெளிநிலை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். இப்பல்கலைக்கழகங்கள் பாட ஏற்பாட்டுக் குழுக்களில் வள அறிஞராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் படிப்பு, வாசிப்பு, எழுத்து, இலக்கியம் என பல்துறை ஆர்வளராக விளங்கிய சந்திர சேகரன் பல்கலைக்கழக கல்வி முடிவடைந்தவுடன் எழுதத் தொடங்கினார். புவியியல் துறை பேராசிரியர் செல்வநாயகம் இந்திய வம்சாவளி தமிழர்களின் முக்கியத்தும், பிரச்சினைகளைப் பற்றிக்கூறி இலங்கை இந்தியர் வரலாறு என்ற அவரது முதலாவது நூல் வெளியிட்டார்.

மலையகத்தமிழர்களின் கல்வி நிலமை வடக்கு கிழக்கு மாகாணத்தமிழரின் உயர்கல்விப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் உயர்கல்வி நிலை பிரச்சினைகள் போன்ற தலைப்புக்களில் பல கட்டுரைகளையும், இரு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மலையகக்கல்வி சில சிந்தனைகள் இலங்கைத் தமிழரின் கல்விப் பிரச்சினைகள் ஆகிய இரு நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளார். முஸ்லிம்களின் உயர் கல்வி பற்றிய இவரது சித்திலெப்பை நினைவுச் சொற்பொழிவு விரைவில் சிறு நூலாக வெளிவரவுள்ளது.

ஐக்கிய அமேரிக்க ஓபோன் பல்கலைக்கழகத்தில் சில காலம் வெளிநிலைப் பேராசிரியராக கடமையாற்றியுள்ளார். புதிய சிந்தனைகளும், கருத்துக்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வெகுசன ஊடகங்களை நங்கு பயன்படுத்தியவர். பேராசிரியர் அவர்கள் நவீன உலகில் ஏற்படும் கல்வி மாற்றங்களை, கல்விக் கோற்பாடுகளை கல்வியாளர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் தமது எழுத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதே எனது ஆழமான மதிப்பீடாகும். பாமரர் முதல் படித்தவர் வரை மிக மிக இனிமையாக பேசக்கூடியவர். அவர் கூடியிருக்கும் இடங்களில் கருத்துக்களை பஞ்சமின்றி பரிமாரப்படும். இனிமையான நெஞ்சத்தின் சொந்தக்காரன்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி சந்திரசேகரனைப்பற்றி இவ்வாறு மதிப்பீடு செய்கிறார். பேராசிரியர் சந்திர சேகரன் எனது மிக மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவரின் எழுத்துத்துரை ஆரம்பம் பல்கலைக்கழக கல்வி முடிவடைந்தவுடன் ஆரம்பிக்கிறது. இவரது பலம் ஆழமான வாசிப்பும், எழுத்துத்துரையில் ஆர்வமுமாகும். இவரின் கல்விப் புலமைப்பரப்பு அசாதாரனமானது, ஆழமானது என என்னிடம் குறிப்பிட்டார். யான் சந்தித்த பேராசிரியர்;களான சபா.ஜெயராசா, க.சின்னத்தம்பி, மா. கருணாநிதி, மா. சின்னத்தம்பி, கலாநிதி சுக்ரி போன்றவர்களும் இவரது கல்விப் புலமையை வெகுவாக பாராட்டி பேசியுள்ளனர். 

பேராசிரியர் சிவத்தம்பி ஓர் அறிமுகம்

சிவத்தம்பி கரவட்டியில் பிறந்தவர் 

இலங்கையில் பிறந்த தமிழ் பேராசிரியர்களான விபுலானந்தஅடிகள், க. கனபதிப்பிள்ளை, வி. செல்வ நாயகம், சு வித்தியானந்தன், சீ. கணபதிப்பிள்ளை, க. கைலாசபதி வரிசையில் சிவத்தம்பி அவர்களுக்கு தனித்துவமான ஓர் இடமுண்டு சிவத்தம்பி தான் வாழும் போது தமிழ் துறையை மாத்திரம் சார்ந்த ஓர் பேராசிரியர் அல்லாமல் பல துறைகளையும் சார்ந்த பேராசிரியராக இருந்தார் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். எனது பேராசிரியர் சந்திர சேகரன் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் பேராசிரியருடைய அறிவுக் புலமையைப் பற்றி எங்களுடைய உரையாடல் தொடரும் சந்திர சேகரன் பேராசிரியர் சிவத்தம்பி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததை யான் நேரில் கண்டு வியந்திருக்கின்றேன். சந்திர சேகரன் சிவத்தம்பி அவர்களைப் பற்றி எழுதுமாறு எனக்கு ஆலோசனை வழங்கினார் அதன் பயனாக போராசிரியர் சிவத்தம்பி அவர்கள் எழுதிய நூல்கள் பின்வருமாறு. 

1. மார்க்கான்டன் வாழ்வெனும் நாடகம்
2. ஜரோப்பிய வரலாற்றுச் சுருக்கம் 
3. தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் 
4. வலவை வைத்தியலிங்கம் பிள்ளை 
5. இலங்கை தமிழ் இலக்கியம் 
6. நாவலும் வாழ்க்கையும் 
7. இலக்கியத்தில் முற்போக்குவாதம் 
8. தனித் தமிழியக்கத்தின் அரசியல் பின்னனி 
9. இலங்கை தமிழ் நாட்டார் வழக்கியல் 
10. இலக்கியமும் கருத்து நிலையும் 
11. இலக்கணமும் சமூக உறவுகளும் 
12. தற்கால தமிழ் இலக்கியத்தில் வறுமையும், சாத்தியமும் 
13. தமிழ் சமூகமும் அதன் சினிமாவும் 
14. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும் 
15. பாரதி மறைவு முதல் மகாகவி வரை 
16. தமிழில் இலக்கிய வரலாறு 
17. தமிழ் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு 
18. பண்பாட்டு உருவாக்கங்களில் பதிப்பகங்களின் பங்கு 
19. யாழ்ப்பாணத்தில் தொடர்பும்; பண்பாடும் 
20. யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 
21.Tamil translation of a Memory of solferino by a Henri Duinant, for the international Red Cross 
22. தமிழ் கற்பித்தலில் உன்னதம்
23. இலங்கை மலையக தமிழர் பண்பாடும் கருத்து நிலையும் 
24. தமிழ் பண்பாட்டில் கிறிஸ்தவம் 
25. ஒரு யானைக்கு துணிவு பிறக்கிறது. 
26. தமிழ் சமூகமும் அதன் மீள் கண்டுபிடிப்பும் 
27. யாழ்ப்பாணத்தில் புலமைத்துவ மரபு
28. கற்கை நெறியாக அரங்கு 
29. பேராசிரியர் கணபதிப்பிள்ளை 
30. புராண நூலிலிருந்து புதுக்கவிதை வரை 
31. அரங்கு 
32. திராவிட கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு 
33. மதமும் கவிதையும் 
34. யாழ்ப்பாண சமூகம் 
35. இலங்கையில் தமிழர் யார் எவர்? 
36.The Tamil Film as a Medium of Political Communication 
37. Drama in Ancient Tamil Society 
38. Literary History in Tamil 
39. Chapter in Tamil 
40. introduction to the Reprint of Vaiyapuripillai
41. Chapter on American socio – cultural impact in Jappna Tamil Society 
42. Chapter on Tamil militants in Sri Lanka in 
43. Tamil Nationalism and social conflicts
44. Sri Lanka Tamil Society and its politics 
45. Understanding the Dravidian Movement 
46. Studies in Ancient Tamil Society 
47. நவீனத்துவம், தமிழ், பின் நவீனத்தவம் 
48. பண்டைச் தமிழ் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி 
49. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் தொகுதி 1 
50. சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும் 
51. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா 
52. Being a Tamil and a Sri Lanka 
53. இலக்கியமும் வாழ்க்கையும் 
54. பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம் 
55. தமிழ் கற்பித்தல் 
56. தமிழின் கவிதையியல் 
57. தமிழர் கலைகள் தொகுப்பு 
58. ஈழத்தின் தமிழிலக்கிய சுடர் மணிகள் 
59. பேராசிரியர் சிவத்தம்பி நேர்காணல்கள் ( ஞானம் சஞ்சிகை வெளியீடு )
60. தமிழ் சமூகத்தில் நாடகம் 
61. தமிழ் கவிதைப் பாரம்பரியம் 

பேராசிரியரின் நூல்களை வாசிக்கும் போது அவருடைய அறிவுப் புலமையை, பண்முகப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், வி. செல்வநாயகம், ஜோர்ஜ் தோம்சன் ( கிரேக்க பேராசிரியர் ) இவர்களுடைய அன்புக்குரிய மாணவனாக இருந்தார் என்பதே வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் 2000 மாம் ஆண்டு வி. க. விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதே போன்று இலங்கையிலும் பல விருதுகளை பெற்றிறுக்கின்றார். எனது வாசிப்புத் துறையில் பேராசிரியரின் பங்கு மிக மிக கணிசமானது. அவருடைய பண்புகளால் யான் வெகுவாக கவரப்பட்டுள்ளேன். வீட்டுக்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை படைத்தவர் தன்னை முதன்மைப்படுத்தாவர். மற்றவர்களை முன்னிலைப்படுத்துபவர் இவருடைய பணிகளும் பங்களிப்புக்களும் மிக மிக கணிசமானவை தமிழ் உலகம் என்றென்றும்; நன்றியுடன் வரலாற்றில் பதிவு செய்யும். பேராசிரியர் கைலாசபதிக்குப்பின்னர் பேராசிரியர் சிவத்தம்பி தமிழ் துறையில் மிக முக்கியமான பேராசிரியராக உலகம் போற்றும் தமிழ் அறிஞராக வாழ்ந்தார். சிவதம்பி அவர்கள் கானும் போதல்லாம் யானும் அவ்வாறே வரவேண்டும் என அடிக்கடி சிந்திப்பதுதுண்டு அதுவே எனது இலட்சிய வேட்கையும் பிரார்த்தனையும் ஆகும்.

Monday, December 26, 2011

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்

1949ல் பேராசிரியர் அனஸ் புத்தளத்திலுள்ள கற்பிட்டி பள்ளிவாயல் துறையில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் முகம்மது சாலிஹ் தாயின் பெயர் தெரியாது. இளங்கலைமாணி பட்டத்தினையும் முதுகலைமாணி பட்டத்தினையும் கலாநிதிப்பட்டத்தினையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். தற்போது பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவராக கடமையாற்றுகின்றார். 

யான் பேராதனையில் இருந்த காலத்தில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அவருடைய வீடு இருந்தது. இவர் சிறந்த மனிதர் முஸ்லிம் சமூகத்தின் மீது அளவு கடந்த பற்றுள்ளவர். இவருடன் அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. பேராசிரியர் அனஸ் அவர்கள் மீது எனக்கு தனியான பிரியம் உண்டு அவர்களுடைய நூல்களை யான் விரும்பி வாசிப்பதுண்டு அனஸ் அவர்களுடைய ஆய்வுத்திறனையும் அறிவின் ஆழத்தினையும் அவரின் நூல்கள் மிக மிக அழகாக எடுத்துக் காட்டுகின்றன. அனஸ் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார் அந்த நூல்களுள் சில

பேராசிரியர் அனஸ் அவர்கள் எழுதிய நூல்கள்

1. ஷெய்கு இஸ்மாயில் புலவர் ஒரு பண்பாட்டுப் பார்வை
2. இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு
3. எச்.எஸ். இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு
4. ஷிக்வா முறையீடு கவியரங்க கவிதைகள் ( பதிப்பாசிரியர் )
5. எஸ். எம். ஏ. ஹசன் தற்கால முஸ்லிம் சமூக பண்பாட்டியல் ஓர் அத்தியாயம்.
6. புத்தள பிரதேச புலவர்கள்
7. இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும்
8. இலங்கையில் இஸ்லாம் ( பதிப்புப்பணி)
9. சமூக விஞ்ஞானங்களும், விஞ்ஞானங்களும் ஒரு முறையியல் நோக்கு.
10. நவீன கால இஸ்லாமிய சிந்தனைகள்
11. இலங்கையில் முஸ்லிம்களின் நுண்கலைகள்
12. வரகவி ஷெய்கு அலாவூத்தீன்
13. அறிஞர் அஸீஸ்
14. மெய்யியல் கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை
15. முஸ்லிம் நாட்டாரியல் தேடலும், தேவையும்
16. ஏ.எம்.ஏ. அஸீஸ் கல்விக் கொள்கையும் நவீனத்துவ சிந்தனைகளும்.
17. புத்தள முஸ்லிம்களின் வரலாறு

போன்ற பல நூல்களை எழுதி பணிகளையும், பங்களிப்புக்களையும் செய்துள்ளார். பல மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். பல நூல்வெளியீட்டில் பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்திருக்கின்றார். பேராசிரியர் அனஸ் அவர்கள் இன்னும் பல கல்விப்பணிகளை ஆற்ற வேண்டுமென விரும்புகின்றேன்.

பேராசிரியா் எம்.எஸ்.எம். அனஸ் ஆய்வு கூடம்

பேராசிரியா் எம்.எஸ்.எம். அனஸ் ஆய்வு கூடம் - ஓட்டமாவடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனஸ் அவா்களுடைய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. உங்களுடைய அவா் பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும். தெலைபேசி இலக்கம் 077-6331897. E-mail : mmmasmeen@gmx.com. Information : Sanan Asmeen . Prof: M.S.M. Anes Research Academy, Main Street Oddamavadi.

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சில பசுமையான நினைவுகள்

             பேராசிரியர் அனஸ் யான் விரும்பும் பேராசிரியர்களுள் மிக மிக முக்கியமானவர். இவருடைய எச்.எஸ்.இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு எனும் நூல் யான் வாசித்த முதலாவது ஆய்வு நூலாகும். அன்றிலிருந்து எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களுடைய ஆதர்ஸ வாசகனானேன். அவர் எழுதும் நூல்களை தேடிப்படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. சுமார் 25 நூல்களை எழுதியுள்ளார். என்னிடம் 20 நூல்கள் உள்ளன. இவர் ஆய்வு, பல்கலை எனும் சஞ்சிகைகளையும் வெளியிட்டவர். இவ்வாறு அந்த வரலாறு தொடர்ந்து செல்லும். 
பேராசிரியர் அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அதிர்ஸ்டவசமாக 2002ம் ஆண்டு பேராதனையில் நடந்த முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடான 'அல் இன்சிராஹ்' சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது. இதில் முக்கியமான விடயம் சகோதரர் எம்.எம்.எம்.சமீம் இந்த சஞ்சிகையினுடைய இதழாசிரியர் என்பது சற்று அழுத்த வேண்டிய விடயமாகும். இந்நிகழ்வில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி பிரதம சொற்பொழிவாற்றினார். சஞ்சிகை விமர்சன உரையை கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் நிகழ்த்தினார். அன்று முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆழமான நட்புனர்வுண்டு. 
அவர் ஆற்றிய நூல் விமர்சனம் இன்றும் எனது காதிலே கேட்கின்றன. யான் ஏன் கூறுகிறேன் என்றால் அந்த விமர்சனம் மிக மிக ஆழமான தனக்கே உரிய பாணியில் உரை நிகழ்த்தப்பட்டது. இன்னும் பேசமாட்டாரா என்ற ஏக்கம் மண்டபத்திலிருந்த எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்குப்பின்னர் பல தடவைகள் பேராதனையில் சந்தித்திருக்கிறேன், வீட்டுக்குப் போயிருக்கிறேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையான நினைவுகளாகும். 
அவரது அழகையும், அறிவையும், பேச்சையும் யான் வெகுவாக விரும்புகின்றேன். அவருடைய சிந்தனைகளால் வெகுவாக கவரப்பட்டுள்ளேன். பேராசிரியர் அனஸ் அவர்கள் எனக்கு மெய்யியல் பேராசிரியராக யான் பார்க்கவில்லை பல துறைகளையும் கற்ற ஞானியாகவே காட்சி தந்தார். அவர் ஒவ்வொருவரைப்பற்றியும் பேசும் போது அவர்களே எங்கள் முன் காட்சி தருகின்ற உணர்வு ஏற்படும். அந்த அளவு அனஸ் அவர்களுடைய அறிவு மிக மிக அகன்ற ஆழமான பார்வை உண்டு எனபதே என்னுடைய மதிப்பீடாகும். முஸ்லிம் சமூகத்தின் கல்வி,பொருளாதாரம், அரசியல், வரலாறு, பண்பாடு, கலாசாரம் போன்ற துறைகள் மீது அவர் கொண்டுள்ள அக்கரை தனியான விசேட கவனிப்புக்குரியதாகும். 
பேராசிரியர் அனஸ் சுமார் ஆறு மாதகாலமாக (2011.05ம் மாதம் – 11ம் மாதம் வரை) கணடாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுகளுக்காக சென்று மீண்டும் இலங்கை வந்துள்ளார். (தென்கிழக்காசிய முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு) இந்த ஆய்வு மிக விரைவில் நூலாக வெளிவரும் அனஸ் அவர்களுடைய நூல்களுக்கு தனியான மவுசு உண்டு. இலங்கையில் மட்டுமன்றி தமிழ் பேசும் உலகிலும் பேசப்படுகின்ற ஒருவராவார். அவர் இன்னும் பல ஆய்வு நூல்களை வெளியிட வேண்டுமென்பதே அவரைச்சார்ந்தவர் என்ற முறையில் யான் விடுக்கும் அறைகூவலாகும். 
அறைகூவல்கள் அனைத்தும் சந்தர்ப்பங்களாகும். பேராசிரியர் அனஸ் அவர்களோடு 2011.12.23 சகோதரர் ஜே.எம்.நௌசாத்தோடு இருக்கும் பொழுது தொடர்பு கொண்டேன். உலகலாவிய அன்மைக்கால விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நீண்ட காலத்திற்குப்பின்னர் அந்த குரலைக்கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆஹா ஆஹா எவ்வளவு அழகும், இனிமையும், அறிவும், ஞானமும் நிறைந்த கருத்துக்கள் இன்னும், இன்னும் கேட்கவேண்டுமென்ற ஆசையும், ஆதங்கமும். உள்ளத்தில் ஏற்படுத்திற்று.
அனஸ் அவர்களுடைய ஆளுமையில் பெரும் செல்வாக்குச்செலுத்தியவர்கள் பேராசிரியர்களான கைலாசநாதன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, சி.சிவசேகரம் போன்றவர்கள் மிக மிக முக்கியமானவர்களாகப்படுகின்றனர். இவர்கள் இலங்கையின் கல்வி வரலாற்றில் மிக முக்கியமானவர்களாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி மரணமடைந்த சந்தர்ப்பத்தில் அனஸ் அவர்கள் நாட்டில் இருக்கவில்லை. அவ்வேலை கனடாவில் இருந்தார். சிவத்தம்பியுடைய மரணம் அனஸ் அவர்களுக்கும் பாரிய இழப்பாகும். சிவத்தம்பி அவர்களும், அனஸ் அவர்களும் நீண்ட காலமாக உறவாக இருந்தனர். அனஸ் அவர்கள் கொழும்புக்குச்செல்லும் போதெல்லாம் சிவத்தம்பி அவர்களுடைய வீட்டுக்கு செல்லுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். சிவத்தம்பி அவர்களும் அனஸ் அவர்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார் என்பது யான் ஊடாடிய சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறார்கள். சிவத்தம்பி அவர்களைப்பற்றி பலர் எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டார். பேராசிரியர்களான எம்.ஏ.நுஃமான், சோ.சந்திரசேகரன், எம்.எஸ்.எம்.அனஸ், சபாஜெயராசா, எம்.ஏ.எம்.சுக்ரி போன்ஆறார்கள் மிக முக்கியமானவர்கள். அனஸ் அவர்களும், சிவத்தம்பி அவர்கள் மீது அளவு கடந்த அன்போடு இருந்தார்கள் என கருதுகின்றேன். அனஸ் அவர்கள் சிவத்தம்பியினுடைய தமிழ்ப்பனிகளைப் பாராட்டியிருக்கிறார்கள், அவருடைய இழப்பு அனஸ் அவர்களை மட்டுமல்ல, எங்களையும் வெகுவாக வாட்டுகிறது. 
இலங்கை முஸ்லிம்களுடைய கல்வி வரலாற்றில் தற்போது பேசப்படுபவர்களான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, பேராசிரியர்களான எம்.ஏ.எம்.நுஃமான், எம்.எஸ்.எம்.அனஸ் போன்றவர்களை யான் அதிகமாக விரும்புகின்றேன். 
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள ஒருவர். அதே போன்று கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களும் அனஸ் அவர்கள் மீது அன்பும் பற்றும் உள்ள ஒருவராவார்.

ஞானியுடனான உறவு ஞானியாக்கும்.