Tuesday, December 27, 2011

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஓர் வாழ்க்கைக் குறிப்பு













பெயர் - சோமசுந்தரம் சந்திரசேகரன்

பிறந்த இடமும் திகதியும் - பதுளைஇ 23.12.1944 
முகவரி - 83/3, 1/1, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6.
கல்வி - 1950 – 1960 : ஊவாக் கல்லூரி, பதுளை
1961 – 1962 : மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை
1963 – 1967 : பேராதனைப் பல்கலைக்கழகம் -B.Ed. (Hons)
1977 – 1978 : ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகம், ஜப்பான் (ஜப்பானிய மொழிஇ பண்பாட்டியல் சான்றிதழ்)
1978 – 1980 : ஹிரோசிமாப் பல்கலைக்கழகம், ஜப்பான் (M.Ed.)
எழுதிய புத்தகங்கள்
1.இலங்கை இந்தியர் வரலாறு.
2.கல்வியியல் கட்டுரைகள்.
3.இலங்கையின் கல்வி வளர்ச்சி.
4.கல்வியும் மனித மேம்பாடும்.
5.புதிய நூற்றாண்டுக்கான கல்வி.
6.இலங்கையில் கல்வி.
7.கல்விச் செயற்பாட்டில் புதிய செல் நெறிகள்.
8.உயர் கல்வியில் புதிய செல் நெறிகள்.
9.கல்விச் சிந்தனையில் புதிய செல் நெறிகள்.
10.இலங்கையில் தமிழர் கல்வி.
11.அபிவிருத்தியும் கல்வியும்.
12.கல்வியியல் சிந்தனைகள்.
13.மலையக கல்வி சில சிந்தனைகள்.
14.கல்வி ஒரு பன்முக நோக்கு.
15.NEW TRENED IN EDUCATION.
16.EDUCATION OF THE DISADVANTAGED COMMUNITIES.
17.கல்வித் திட்டமிடல்
18.கல்வியும் மனித வள விருத்தியும்.
19.புதிய கல்வித் தடங்கள்.
20.சமகாலகல்வி முறைகளின் பரிமாணங்கள்.
21.அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்.
22.முகாமைத்துவக் கொள்கைகள் ஓர் அறிமுகம்.
23.மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம் ஒரு விரி நிலை நோக்கு.
24.இலங்கையின் உயர் கல்வி பல்கலைக்கழக கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்.
25.கல்வியியலும் நிகழ் பதிவுகளும்.
26.சமகால கல்வி முறைகள் ஒரு விரி நிலை நோக்கு.

மொழி பெயர்ப்புப் பணி

1.இந்தியாவும் அதன் தென்னாசிய அயல் நடுகளும்.
2.சமுதாய வலுவூட்டல்
3.ஜனநாயகம் என்றால் என்ன?
4.அபிவிருத்தி மாதிரிகள்.
5.ஜனநாயக அரசாங்க மாதிரிகள்.
6.உழைப்பால் கல்வியில் உயர்வோர்.
7.மேலதிக மொழிகளை கற்பித்தல்.
8.பெற்றோரும் கல்வியும்.
9.தனிமுறைப் போதனை.
10.பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள்.
11.பசுமை நூல் (மறைந்த லிபியா ஜனாதிபதி கடாபி எழுதியது.)

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஓர் அறிஞர், சிந்தனையாளர், கல்வியியலாளர், பல்கழைக்கழக பீடாதிபதி, எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், என இலங்கையில் மட்டுமன்றி தமிழ் பேசும் உலகில் நன்கு அறியப்பட்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரன் என்பதே எனது உறுதியான கருத்தாகும். இலங்கையில் தோன்றிய கல்வியியல் பேராசியர்களான எஸ். முத்துலிங்கம்,ப.சந்திர சேகரன், சபா ஜெயராசா, பாக்கீர் ஜௌபர் போன்றோர் மிக முக்கியமானவர்கள்.கல்வியியல் துறையில் இவர்களுடைய பணிகளும் பங்களிப்புகளும் மிக மிக கணிசமானவை என்பதே எனது மதிப்பீடாகும்.
பேராதனையில் கல்வியலோடு வரலாறு ,பொருளியல், தமிழ் போன்ற பாடங்களையும் கற்றதால் ஏராளமான தமிழ் பேராசிரியர்களிடம் கற்க முடிந்தது. பேராசியர்களான சு.வித்தியானந்தன், செல்வநாயகம், வேலுப்பிள்ளை, க.கணபதிப்பிள்ளை போன்றோர் தமிழ் கற்பித்தனர். அமீர் அலி, பால கிருஸணன், சின்னத்தம்பி போன்றோர் பொருளியல் கற்பித்தனர்.


இந்திர பாலா, பத்ம நாதன், போன்றோர் வரலாறு கற்பித்தனர். அப்போது கல்வித்துறை விரிவுரையாளர்களாக இருந்தோர் பேராசிரியர்கள் ப.சந்திர சேகரன், எஸ்.முத்துலிங்கம், கலாநிதி அகிலா நைல்ஸ் போன்றோர் இருந்தனர்.

கல்;வியியல் தொடர்பாக பிலிப்பைன்ஸ், ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, இந்தியா, லிபியா, ஜேர்மன் போன்ற நாடுகளில் நடைபெற்ற மகாநாடுகள், செயலமர்வுகள் என்பவற்றில் பங்கு கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வியியல் வெளிநிலை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். இப்பல்கலைக்கழகங்கள் பாட ஏற்பாட்டுக் குழுக்களில் வள அறிஞராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் படிப்பு, வாசிப்பு, எழுத்து, இலக்கியம் என பல்துறை ஆர்வளராக விளங்கிய சந்திர சேகரன் பல்கலைக்கழக கல்வி முடிவடைந்தவுடன் எழுதத் தொடங்கினார். புவியியல் துறை பேராசிரியர் செல்வநாயகம் இந்திய வம்சாவளி தமிழர்களின் முக்கியத்தும், பிரச்சினைகளைப் பற்றிக்கூறி இலங்கை இந்தியர் வரலாறு என்ற அவரது முதலாவது நூல் வெளியிட்டார்.

மலையகத்தமிழர்களின் கல்வி நிலமை வடக்கு கிழக்கு மாகாணத்தமிழரின் உயர்கல்விப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் உயர்கல்வி நிலை பிரச்சினைகள் போன்ற தலைப்புக்களில் பல கட்டுரைகளையும், இரு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மலையகக்கல்வி சில சிந்தனைகள் இலங்கைத் தமிழரின் கல்விப் பிரச்சினைகள் ஆகிய இரு நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளார். முஸ்லிம்களின் உயர் கல்வி பற்றிய இவரது சித்திலெப்பை நினைவுச் சொற்பொழிவு விரைவில் சிறு நூலாக வெளிவரவுள்ளது.

ஐக்கிய அமேரிக்க ஓபோன் பல்கலைக்கழகத்தில் சில காலம் வெளிநிலைப் பேராசிரியராக கடமையாற்றியுள்ளார். புதிய சிந்தனைகளும், கருத்துக்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வெகுசன ஊடகங்களை நங்கு பயன்படுத்தியவர். பேராசிரியர் அவர்கள் நவீன உலகில் ஏற்படும் கல்வி மாற்றங்களை, கல்விக் கோற்பாடுகளை கல்வியாளர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் தமது எழுத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதே எனது ஆழமான மதிப்பீடாகும். பாமரர் முதல் படித்தவர் வரை மிக மிக இனிமையாக பேசக்கூடியவர். அவர் கூடியிருக்கும் இடங்களில் கருத்துக்களை பஞ்சமின்றி பரிமாரப்படும். இனிமையான நெஞ்சத்தின் சொந்தக்காரன்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி சந்திரசேகரனைப்பற்றி இவ்வாறு மதிப்பீடு செய்கிறார். பேராசிரியர் சந்திர சேகரன் எனது மிக மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவரின் எழுத்துத்துரை ஆரம்பம் பல்கலைக்கழக கல்வி முடிவடைந்தவுடன் ஆரம்பிக்கிறது. இவரது பலம் ஆழமான வாசிப்பும், எழுத்துத்துரையில் ஆர்வமுமாகும். இவரின் கல்விப் புலமைப்பரப்பு அசாதாரனமானது, ஆழமானது என என்னிடம் குறிப்பிட்டார். யான் சந்தித்த பேராசிரியர்;களான சபா.ஜெயராசா, க.சின்னத்தம்பி, மா. கருணாநிதி, மா. சின்னத்தம்பி, கலாநிதி சுக்ரி போன்றவர்களும் இவரது கல்விப் புலமையை வெகுவாக பாராட்டி பேசியுள்ளனர். 

No comments:

Post a Comment