Monday, December 26, 2011

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்

1949ல் பேராசிரியர் அனஸ் புத்தளத்திலுள்ள கற்பிட்டி பள்ளிவாயல் துறையில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் முகம்மது சாலிஹ் தாயின் பெயர் தெரியாது. இளங்கலைமாணி பட்டத்தினையும் முதுகலைமாணி பட்டத்தினையும் கலாநிதிப்பட்டத்தினையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். தற்போது பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவராக கடமையாற்றுகின்றார். 

யான் பேராதனையில் இருந்த காலத்தில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அவருடைய வீடு இருந்தது. இவர் சிறந்த மனிதர் முஸ்லிம் சமூகத்தின் மீது அளவு கடந்த பற்றுள்ளவர். இவருடன் அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. பேராசிரியர் அனஸ் அவர்கள் மீது எனக்கு தனியான பிரியம் உண்டு அவர்களுடைய நூல்களை யான் விரும்பி வாசிப்பதுண்டு அனஸ் அவர்களுடைய ஆய்வுத்திறனையும் அறிவின் ஆழத்தினையும் அவரின் நூல்கள் மிக மிக அழகாக எடுத்துக் காட்டுகின்றன. அனஸ் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார் அந்த நூல்களுள் சில

பேராசிரியர் அனஸ் அவர்கள் எழுதிய நூல்கள்

1. ஷெய்கு இஸ்மாயில் புலவர் ஒரு பண்பாட்டுப் பார்வை
2. இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு
3. எச்.எஸ். இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு
4. ஷிக்வா முறையீடு கவியரங்க கவிதைகள் ( பதிப்பாசிரியர் )
5. எஸ். எம். ஏ. ஹசன் தற்கால முஸ்லிம் சமூக பண்பாட்டியல் ஓர் அத்தியாயம்.
6. புத்தள பிரதேச புலவர்கள்
7. இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும்
8. இலங்கையில் இஸ்லாம் ( பதிப்புப்பணி)
9. சமூக விஞ்ஞானங்களும், விஞ்ஞானங்களும் ஒரு முறையியல் நோக்கு.
10. நவீன கால இஸ்லாமிய சிந்தனைகள்
11. இலங்கையில் முஸ்லிம்களின் நுண்கலைகள்
12. வரகவி ஷெய்கு அலாவூத்தீன்
13. அறிஞர் அஸீஸ்
14. மெய்யியல் கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை
15. முஸ்லிம் நாட்டாரியல் தேடலும், தேவையும்
16. ஏ.எம்.ஏ. அஸீஸ் கல்விக் கொள்கையும் நவீனத்துவ சிந்தனைகளும்.
17. புத்தள முஸ்லிம்களின் வரலாறு

போன்ற பல நூல்களை எழுதி பணிகளையும், பங்களிப்புக்களையும் செய்துள்ளார். பல மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். பல நூல்வெளியீட்டில் பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்திருக்கின்றார். பேராசிரியர் அனஸ் அவர்கள் இன்னும் பல கல்விப்பணிகளை ஆற்ற வேண்டுமென விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment